பாகிஸ்தானை காத்திருந்து பழிவாங்கிய இந்தியா... வெளியான வீடியோ! ஒத்துக் கொண்ட தீவிரவாதி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவம் தனக்கு அளித்த பாதுகாப்பு குறித்து வீடியோவில் பேசியிருந்ததை கிண்டல் செய்யும் வகையில் வீடியோ வெளியாகியிருந்த நிலையில், தற்போது அதற்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுத்துள்ளது.

இந்திய விமானியான அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தினரால் முதலில் கைது செய்யப்பட்ட போது, அவர் தாக்கியவாறு வீடியோக்கள் வெளியாகியிருந்தன.

இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை உருவானது. அதன் பின் இந்திய இராணுவத்தினர் அபிநந்தனிடம் பேசும் வீடியோ வெளியானது.

அதில், முதலில் அவரின் பெயர், நீங்கள் யார் என்ற தகவலை கேட்டனர். அதன் பின் சில தகவல்களை கேட்ட போது அபிநந்தன் கூற மறுத்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு டீ கொடுக்கப்பட்டது.

அந்த டீ எப்படி இருக்கிறது? என்று கேட்ட போது அவர் நன்றாக இருக்கிறது என்று கூறினார்.

இதை வைத்து பாகிஸ்தான் கிண்டல் செய்யும் விதமாக சில வீடியோக்களை வெளியிட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த 21-ஆம் திகதி காஷ்மீர் எல்லை வழியாக இரண்டு தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்தனர். அவர்களைப் பிடித்த இந்திய ராணுவம் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் இருவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பில் பயிற்சி பெற்றதும் காஷ்மீரில் தீவிரவாத செயல்களைச் செய்ய வந்ததும் தெரியவந்தது.

விசாரணையை இந்திய இராணுவம் வீடியோவாக பதிவு செய்தது.

அதில், அபிநந்தன் கைது செய்யப்பட்ட போது, எப்படி டீ கப் கொடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டரோ அதே போன்று தீவிரவாதியின் கைகளில் டீ கப்பை கொடுத்து பேச வைத்துள்ளனர்.

தீவிரவாதியான நஜிம் தான் யார் என்பது குறித்த விவரங்களை கூறி வருகிறான். அப்போது இந்திய இராணுவத்தினர் டீ எப்படி இருக்கிறது என்று கேட்க, உடனே அவன் நன்றாக இருக்கிறது என்று பதிலளித்தான்.

இந்திய இராணுவத்தினர் இந்த வீடியோ பழிவாங்கும் நோக்கிலே எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்