40 ஆண்டுகள் ஆட்சி.. ஆப்பிரிக்க விடுதலை வீரர்.. சிங்கப்பூரில் காலமான 95 வயது ஜனாதிபதி!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் ராபர்ட் முகாபே தனது 95வது வயதில் இறந்துவிட்டதாக, அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி எம்மர்சன் மனாங்காக்வா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயின் ஜனாதிபதியாக இருந்தவர் ராபர்ட் முகாபே(95). ஒரு ஆப்பிரிக்க விடுதலை வீரராகவும், இன நல்லிணக்கத்தின் தலைவராகவும் இவர் விளங்கினார்.

ஜிம்பாப்வேவை சுமார் 40 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து ஆட்சி புரிந்த முகாபே, அந்நாட்டை அதிக காலம் ஆட்சிபுரிந்தவர் என்ற பெயர் பெற்றார்.

Getty

இந்நிலையில், சிங்கப்பூர் சென்றிருந்த முகாபே உடல்நலக்குறைவு காரணமாக காலமானதாக தற்போதைய ஜிம்பாப்வே ஜனாதிபதி எம்மர்சன் மனாங்காக்வா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘ஜிம்பாப்வேயின் நிறுவன தந்தையும், முன்னாள் ஜனாதிபதியுமான சி.டி.ராபர்ட் முகாபே காலமானதை மிகுந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன். விடுதலையின் சின்னமாக விளங்கியவர் சி.டி.முகாபே.

அவர் ஒரு ஆப்பிரிக்கவாதியாக தனது வாழ்க்கையை, தனது மக்களின் விடுதலை மற்றும் அதிகாரம் அழிப்பிற்காக அர்ப்பணித்தார்.

நமது தேசம் மற்றும் கண்டத்தின் வரலாற்றில் அவர் செய்த பங்களிப்பு ஒருபோதும் மறக்கப்படாது. அவருடைய ஆன்மா நித்திய அமைதியுடன் ஓய்வெடுக்கட்டும்’ என தெரிவித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தனது சொந்த ஆயுதப்படைகளால் முகாபே பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்