சுற்றுலா சென்ற இடத்தில் இளைஞருக்கு என்ன ஆனது? விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி அவுஸ்திலேயாவுக்கு சென்ற போது மாயமான நிலையில் விமான நிலையத்தில் அவர் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

தியோ ஹயீஸ் என்ற இளைஞர் அவுஸ்திரேலியா மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல கடந்த மே மாதம் வந்தார்.

இந்நிலையில் கடந்த மே 31ஆம் திகதி அவர் திடீரென காணாமல் போனார். கடைசியாக அவர் 31ஆம் திகதி இரவு 11 மணிக்கு மதுபான விடுதியில் இருந்தநிலையில் பின்னர் மாயமானார்.

மேலும் ஜூன் 1ஆம் திகதி அங்குள்ள ஒரு இடத்தில் அவர் நடந்து செல்வது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து விமானம் மூலமும், கடலிலும் மற்றும் பல இடங்களில் அவரை பொலிசார், தனியார் ஏஜென்சி ஊழியர்கள் தேடியும் இன்னும் கிடைக்கவில்லை.

ஏற்கனவே தனது மகனை பற்றி தெரிந்தால் தகவல் சொல்லுங்கள் என ஹயீஸ் தந்தை கண்ணீர் மல்க அவுஸ்திரேலிய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார், மேலும் அவர் மகனை தொடர்ந்து தேடி வருகிறார்.

இதே போல ஹயீஸின் காதலியும் உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த ஜூலை மாதம் ஹயீஸ் அணிந்திருந்தது போலவே ஒரு தொப்பியை அதிகாரிகள் கண்டுபிடித்தார்.

இதை டிஎன்ஏ பரிசோதனைக்கும் அனுப்பினார்கள். இந்த நிலையில் ஹயீஸ் விமான நிலையத்தில் இருக்கும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், உடமைகளை வைக்கும் இடத்தின் அருகில் ஹயீஸ் நிற்கிறார். அவரை உறவினர் பெண்ணான லிசா வீடியோ எடுக்கிறார்.

அப்போது, நான் எதை கண்டுபிடித்திருக்கிறேன் என பாருங்கள் என கூற, ஹயீஸ் சத்தமாக சிரிப்பது போல உள்ளது.

ஹயீஸை தேடுவதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள Looking for Theo Hayez என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பதிவில், ஹயீஸ் குறித்து யாருக்காவது ஏதேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம் என சில போன் நம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்