வலையில் சிக்கிய குட்டி டால்பினை விடுவித்த மீனவர்கள்: தாய் செய்த நெகிழ்ச்சி செயல்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

மீனவர்களின் வலையில் சிக்கிய குட்டி டால்பினை அவர்கள் விடுவிக்க, அதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் துள்ளிக் குதித்து தனது மகிழ்ச்சியை தாய் டால்பின் வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த நெகிழ்ச்சி சம்பவம் இத்தாலியின் Procida தீவில் நடைபெற்றுள்ளது.

அந்த வீடியோவில் வலையிலிருந்து தனது குட்டி விடுவிக்கப்பட்டது என்பதை அறிந்த தாய் டால்பின் அட்டகாசமாக துள்ளிக்குதித்து தனது நன்றியை வெளிப்படுத்துவதைக் காணலாம்.

முதலில் அந்த குட்டி டால்பின் கடலுக்கு வெளியே தலைகாட்டுவதைக் கண்டு மீனவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர்.

பின்னர் கடல் மட்டத்திலிருந்து வெகு உயரத்திற்கு பல முறை துள்ளிக் குதிக்கும் தாய் டால்பினின் மகிழ்ச்சியைக் காண முடிகிறது.

தாயும் குட்டியும் கடலுக்கு அடியில் நீந்திச் செல்ல, தாங்கள் செய்த நல்ல காரியத்திற்காக கரவொலி எழுப்பும் மீனவர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வீடியோ முடிவடைகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்