கொல்லப்படுவதற்கு முன் பிரபல பாடகியின் இறுதி வார்த்தைகள்: வருத்தத்தில் ரசிகர்கள்

Report Print Basu in ஏனைய நாடுகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பிரபல பாடகி Kylie Rae Harris இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இறுதி ட்விட்டால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

புதன்கிழமை கார் விபத்தில் இறந்த பாடகி Kylie Rae Harris-க்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். செப்டம்பர் 4ம் திகதி வெளியிடப்பட்ட தனது இறுதி ட்வீட்டில், 30 வயதான Kylie Rae Harris நியூ மெக்ஸிகோ வழியாக வாகனம் ஓட்டுவது பற்றி விவாதித்தார்.

அவர் பதிவிட்ட ட்விட்டில். எரிபொருள் வரம்பு 46 மைல்களாக இருக்கிறது, அருகிலுள்ள எரிவாயு நிலையத்திலிருந்து நான் 36 மைல் தொலைவில் இருக்கிறேன். அன்புள்ள குழந்தை இயேசுவே தயவுசெய்து நியூ மெக்ஸிகோ சாலையில் என்னை தவிக்கவிட்டு விடாதே என பதிவிட்டுள்ளார்.

சில மணிநேரங்களுக்குப் பிறகு சோகமான விபத்தில் ஒரு குழந்தையின் தாயான Kylie Rae Harris இறந்துவிட்டதாக தெரியவந்தது. விபத்து குறித்து அதிகாரி கூறியதாவது,

பாடகர் மாகாண சாலை 522-ல் விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் மூன்று வாகனங்கள் தொடர்புபட்டுள்ளதாகவும், 16 வயது சிறுமியும் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Kylie is survived by her daughter, six-year-old Corbie
(Image: Instagram / Kylie Rae Harris)

மூன்றாவது ஓட்டுநர் விபத்தில் இருந்து காயங்களின்றி உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

நியூ மெக்ஸிகோவின் Taos-ல் வியாழக்கிழமை நடைபெற்ற பிக் பார்ன் இசை விழாவில் பங்கேற்க பயணித்த Kylie Rae Harris பரிதாபமாக உயிரிழிந்துள்ளார்.

Kylie's last tweet left fans heartbroken
(Image: Twitter / Kylie Rae Harris)

Kylie Rae Harris செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் அவரது மரணத்தை உறுதிப்படுத்தினார். Kylie Rae Harris அறிந்த அனைவருக்கும் அவர் தன் குடும்பத்தை எவ்வளவு நேசிக்கிறாள், அதையும் மீறி இசையை எவ்வளவு நேசிக்கிறாள் என்பது தெரியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்