மலையுச்சியின் கீழ் தனியாக தவழ்ந்த குழந்தை, அருகில் இறந்து கிடந்த ஐந்து இந்திய வம்சாவளியினர்: ஒரு மர்ம சம்பவம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஃபிஜி தீவில் மலையுச்சி ஒன்றின்கீழ் ஒரு குழந்தை தனியாக தவழ்ந்து வருவதைக் கண்ட ஒரு பெண் அதை தூக்க அருகில் செல்ல, அங்கு வரிசையாக ஐந்து உடல்கள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த சம்பவம் நடந்தது ஃபிஜி தீவிலுள்ள Nausori Highlands பகுதியில்.

Kelera Toloi (25) என்ற இளம்பெண், மலையுச்சி ஒன்றின் கீழ் ஒரு வயது குழந்தை ஒன்று தனியாக தவழ்வதைக் கண்டு பதறிப்போய் அதை தூக்கச செல்லும்போது, சற்று தொலைவில் ஐந்து உடல்கள் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

வெறும் நேப்பியுடன் (Nappy) தவழ்ந்து சென்ற அந்த குழந்தையைக் கண்ட Kelera, தானும் ஒரு குழந்தைக்கு தாய் என்பதால் பதறிப்போய், அதன் நேப்பியை மாற்றிவிட்டு அதற்கு பாலூட்டியிருக்கிறார்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்து கிடந்த ஐந்துபேரும் இந்திய வம்சாவளியினரான நிர்மல் குமார் (63), அவரது மனைவி உஷா தேவி (54), அவர்களது மகள் நிலேஷ்னி காஜல் (34), அவரது பிள்ளைகள் Sana(11) மற்றும் Samara (8) என தெரியவந்துள்ளது.

அந்த ஒரு வயது குழந்தை குமாரின் உறவினரின் மகள் என கருதப்படுகிறது. இந்தியாவிலிருக்கும் குமாரின் சகோதரரான ராஜேஷ் உடனடியாக ஃபிஜி வந்தடைந்துள்ளார்.

இறந்த குடும்பம் Nadi நகரிலுள்ள Legalega என்ற இடத்தில் வசித்து வந்துள்ளது. உடற்கூறு ஆய்வில், இறந்த ஐவரும் ஒரு குறிப்பிட்ட நச்சுப்பொருளை சாப்பிட்டதால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக நியூசிலாந்தைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவரும் அவரது மனைவியும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

ஃபிஜியில் ஒருவரை 48 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைத்து விசாரிக்க முடியாது, எனவே விசாரணையில் சற்று பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொலிசார் தொடர்ந்து விசாரணையை நீட்டிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்