மொடல் அழகியை கொலை செய்து கருப்பையை வெட்டி எடுத்த மருத்துவமனை?

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மொடல் அழகியை கொலை செய்து உடல் உறுப்புகளை மருத்துவமனை விற்பனை செய்துவிட்டதாக அவருடைய தந்தை புகார் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த 16 வயதான மொடல் அழகி சோபியா லான்ஷகோவா, விடுமுறையை கொண்டாடுவதற்காக தன்னுடைய குடும்பத்துடன் துருக்கி நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு திடீரென உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு கடுமையான குடல் அழற்சி இருப்பது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து மார்பு பகுதியில் வலி எடுத்துள்ளது.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் 8 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அவரது சடலத்தை பரிசோதித்தபோது கருப்பை மற்றும் பிற உறுப்புகள் காணவில்லை என்று ரஷ்ய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவருடைய தந்தை வியாசஸ்லாவ் லான்ஷகோவ்(38), தன்னுடைய மகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறியுள்ளார். மகளின் கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் வெட்டி எடுக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பொலிஸார் கிரிமினல் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது மரணம் குறித்த முழு தடயவியல் அறிக்கை அடுத்த மாத தொடக்கத்தில் ரஷ்யாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கை விசாரிக்குமாறு மொடல் அழகியின் தந்தை துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்