பிரித்தானியா சுற்றுலாப்பயணிகள் கொலை... குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அறிவித்த நீதிமன்றம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிரித்தானியா சுற்றுலாப்பயணிகளை கொலை செய்த குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கி நீதிமன்ற்ம அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரித்தானியாவின் Norfolk பகுதியைச் சேர்ந்தவர் Hannah Witheridge. இவர் தன் நண்பர் David Miller-வுடன் கடந்த 2014-ஆம் ஆண்டு தாய்லாந்தின் Koh Tao-வில் இருக்கும் தீவிற்கு சுற்றுலாப்பயணியாக சென்றுள்ளார்.

அப்போது அங்கு மியான்மரைச் சேர்ந்த அதிகள் Zaw Lin மற்றும் Wai Phyo ஆகியோர் Hannah Witheridge-ஐ பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். அவரின் நண்பர் David Miller-யும் கொலை செய்து அங்கிருக்கும் கடற்கரையில் புதைத்துள்ளனர்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் Zaw Lin மற்றும் Wai Phyo அவர்களை அங்கிருக்கும் கடற்கரையில் புதைத்துவிட்டதாக கூற, பொலிசார் இருவரிடன் உடலையும் மீட்டனர்.

இந்த சம்பவம் ஊடங்களில் பெரிய அளவில் பேசப்பட்டதால், இந்த வழக்கின் விசாரணையை பொலிசார் உடனடியாக முடிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது, அதுமட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இப்படி கொலை செய்யப்பட்டுள்ளதால், தாய்லாந்திற்கு சுற்றுலாப்பயணிகளாக வருபவர்களின் எண்ணிக்கையும், இந்த சம்பவத்தால் குறைந்துள்ளதாக அங்கிருக்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதையடுத்து கடந்த 2015-ஆம் ஆண்டு இருவருக்கும் மரணதண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இது குறித்து மேல் முறையீடு செய்ப்பட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து வந்த நிலையில், இன்று தாய்லாந்து உச்சநீதிமன்றம் இருவரும் மரணதண்டனையை உறுதி செய்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்