10 வருடங்களாக வலியால் துடித்த நபர்... ஸ்கேன் ரிப்போர்ட்டில் என்ன இருந்தது தெரியுமா? வெளியான புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் 10 வருடங்களாக கடுமையான வலியால் துடித்து வந்த 55 வயது நபரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், அவரின் உடலின் உள்ளே 8 ஊசிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சீனாவின் Changsha பகுதியைச் சேர்ந்தவர் Chen. 55 வயதான இவர் கடந்த 10 ஆண்டுகளாக உடம்பின் பின்பகுதியில் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து வேலைக்கு சென்று வந்ததால், இதை அவர் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் வலி அதிகமாவே அவர் இந்த மாத துவக்கத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்களுக்கு காரணம் தெரியாததால், ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.

அப்போது அவரின் பின்பகுதியில் எட்டு சிறிய அளவில் கூர்மையாக ஏதோ ஒரு குச்சி போன்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து கடந்த 15-ஆம் திகதி மருத்துவர்கள் நடத்திய அறுவை சிகிச்சையில், 8 ஊசிகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர், அதன் பின் அதை வெற்றிகரமாக சிகிச்சை மூலம் நீக்கியுள்ளனர்.

இப்போது Chen நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் எப்படி இத்தனை ஊசிகள் அவரின் பின்புறம் வந்திருக்கும் என்று மருத்துவர்கள் அவரிடம் கேட்ட போது ,அவர் வேலை செய்த இடத்தில் ஒரு முறை குப்பை குவியலில் விழுந்துவிட்டாராம்.

அதில் ஊசிகள் நிறைந்த குப்பை பை இருந்ததாகவும், அதில் சில ஊசிகள் இவரை குத்தியத போது, சில ஊசிகளை சரியாக எடுத்துவிட்டு, அதன் பின் கவனிக்காமல் இருந்ததே காரணம் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...