கால் உடைந்து பரிதாபமாக நடந்து சென்ற நாய்... அதன் பின் காத்திருந்த ஆச்சரியம்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் நாய் ஒன்று சாப்பாட்டிற்காக கால் உடைந்தது போன்று நடிக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தாய்லாந்தின் தலைநகர் பேங்காங்கில் இருக்கும் நாய் ஒன்று கால் உடைந்தது போன்று மிகவும், பரிதாபமாக நடந்து செல்கிறது. அதன் பின் திடீரென்று நல்ல நிலை எழுந்து நின்று ஓடுகிறது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகத்தில் நபர் ஒருவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் வேலை பார்க்கும் இடத்தில் தான் இந்த நாய் சில ஆண்டுகளாக இருக்கிறது.

அவ்வப்போது திடீரென்று கால் உடைந்தது போன்று நடந்து செல்லும், இது உணவிற்காக இப்படி செய்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் இதற்கு இப்படி சொல்லிக் கொடுத்தது யார் என்று தெரியவில்லை.

ஆனால் திடீர் திடீரென்று இது போன்று நடக்கும் என்று கூறியுள்ளார்.

குறித்த வீடியோவில், கால் உடைந்தது போன்றே மிகவும் பரிதாபமாக செல்கிறது. அப்போது அந்த வழியே செல்லும் பலரும் அனுதாபப் படுகின்றனர், இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மட்டும், அந்த நாய்க்கு என்ன ஆனது என்று நின்று பார்க்கிறார்.

அதன் பின் நாய் திடீரென்று சகஜ நிலைக்கு திரும்பியதைக் கண்டு ஆச்சரியப்பட்டு சிரிக்கிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்