குழந்தையுடன் இருக்கும் மனைவியிடம் மார்ஷியல் ஆர்ட் திறமையைக் காட்டும் நபர்: அப்படியும் குழந்தையை விடாத மனைவி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

மார்ஷியல் ஆர்ட் திறமை கொண்ட ஒருவர் கையில் குழந்தையுடன் இருக்கும் தன் மனைவியை தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாமின் பிரபல மார்ஷியல் ஆர்ட் நிபுணரான Nguyen Xuan Vinh (32) என்பவர்தான் அந்த ’திறமைசாலி’.

Nguyen, தனது மனைவியான Vu Thi Thu Ly (27)உடன் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவரை தனது மார்ஷியல் ஆர்ட் முறைப்படி தாக்கியுள்ளார்.

Thu Ly வெளியிட்டுள்ள CCTV காட்சிகளில், கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ வாக்குவாதம் நடப்பதையும், அறைக்குள் செல்லும் Thu Lyயை Nguyen, கிக் பாக்ஸிங்கின்போது எதிரியை தாக்குவதுபோல, முகத்தில் காலால் மிதிப்பதையும் காண முடிகிறது.

பின்னர் அறைக்கு வெளியில் வந்தபின்னரும் வாக்குவாதம் தொடர, மனைவியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விடுகிறார் Nguyen.

கையில் கைக்குழந்தையுடன் நிற்கும் Thu Lyயால் அதை தாங்க முடியாமல் அப்படியே குழந்தையுடன் கீழே விழுகிறார் அவர்.

Thu Ly கையில் குழந்தையுடன் கீழே விழும்போது, அவரது தலை தரையில் மோதியபின்னரும், கையில் வைத்துள்ள குழந்தையை கீழே போட்டுவிடாமல் பத்திரமாக பிடித்துக் கொண்டிருப்பதையும் காணமுடிகிறது.

தான் தாக்கும்போது குழந்தையை கையில் வைத்திருக்குமாறு Thu Lyயை Nguyen கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், இவ்வளவு நடந்தும் அருகில் இருக்கும் ஒரு பெண் எந்த அதிர்ச்சியும் காட்டாமல் இருப்பதைப் பார்க்கும்போது, இது அந்த வீட்டில் அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான் போலும் என்று எண்ணத்தோன்றுகிறது.

CCTV கமெரா காட்சிகளை வெளியிட்டு பேட்டியளித்துள்ள Thu Lyயும், தான் அடிக்கடி தனது கணவரால் தாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Thu Ly வியட்நாமில் பிரபலமான அரசு வானொலி நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளினி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்