ஜப்பானில் கடும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! பொதுமக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேற்றம்

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

இன்று அதிகாலையில் ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் கடும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகாக பதிவாகியிருந்தாக கூறப்படுகின்றது.

குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டபோதிலும், சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.16 மணியளவிலும் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

மேலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியுள்ளன.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளைவிட்டு வெளியேறி வெட்டவெளிக்கு வந்தனர்.

தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மேலும் குறித்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் அடைந்ததாகவோ, உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவோ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers