காதலிக்க ஆள் கிடைக்காத Single-காக ஏற்பாடு செய்யப்பட்ட ரயில் பயணம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவில் காதலிக்க ஆள் கிடைக்காமல் ஒற்றையாக இருக்கும் நபர்களுக்காக ஒரு நாள் இரவு ரயில் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காதலிக்க ஆள் கிடைக்காமல் தனிமையில் இருக்கும் நபர்களுக்காக ரயில்வே ஆணையம் மற்றும் கம்யூனிஸ்ட் இளைஞர் கழகம் இணைந்து தனித்துவமான பயணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

அதன்படி சீன நாட்டின் 200 மில்லியன் ஒற்றை மக்களை அமூர் என்ற இடத்திற்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டது.

1,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் கடந்த வாரம் ஒருநாள் இரவு ரயில் பயணத்தில் கலந்துகொண்டனர். இதில் சிங்கிளாக இருக்கும் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த நபரிடம் கலந்துரையாடுவார்கள். அந்த நபருக்கும் பிடித்துவிட்டால் திருமணம் செய்துகொள்வார்கள்.

இந்த முறையானது கடந்த 2017ம் ஆண்டு நடந்து வருகிறது. மூன்று வருடாந்திர பயணங்களில் 3,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் தற்போது வரை 10 ஜோடிகள் ரயிலில் சந்தித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்