மூச்சு விடமுடியாமல் தவித்த பெண்: மருத்துவமனையில் தெரிய வந்த அதிர வைக்கும் உண்மை!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

வயிறு வலி ஏற்பட்டு மூச்சு விட முடியாமல் தவித்த ஒரு பெண் மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு அவருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு 59 வயதுடைய பெண் ஒருவர் வயிற்று வலியால் தவித்து வந்ததோடு, மூச்சு விடவும் கஷ்டப்பட்டு வந்தார்.

இந்நிலையில் ஒரு நாள் அவர் மருத்துவமனைக்கு செல்ல, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கருப்பைக்குள் ஒரு ராட்சத கட்டி வளர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.

உடனடியாக அறுவை சிக்கிச்சை ஒன்றை மேற்கொண்ட மருத்துவர்கள், அந்த பெண்ணின் கருப்பையிலிருந்து 25 கிலோ எடையுள்ள ஒரு ராட்சத கட்டியை அகற்றினார்கள்.

வெளியாகியுள்ள படங்களில் அந்த கட்டியை மருத்துவர்கள் தூக்க முடியாமல் தூக்கிச் செல்வதைக் காணலாம்.

இத்தகைய கட்டிகள், குடல், வயிறு முதலான உள்ளுறுப்புகளை அழுத்துவதாலேயே அந்த வலியும், மூச்சு விட கஷ்டமும் ஏற்படுவதாக கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்