இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்தால் என்ன நடக்கும்? இம்ரான்கான் சொன்ன முக்கிய தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் நடந்தால், இது மொத்த உலகநாடுகளையும் பாதிக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று மாலை காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார்.

அப்போது, நாங்கள் காஷ்மீருக்காக எந்த அளவுக்கும் செல்வோம். இந்தியா ஒரு படி முன்னாடி எடுத்து வைத்தால், நாங்கள் இரண்டு அடி முன் வைப்போம்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இருக்கும் காஷ்மீர் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்க்க முடியும்.

பாகிஸ்தானுக்கு தேவை பேச்சுவார்த்தை. ஆனால் இந்தியா பயங்கரவாத பிரச்சினையை தொடர்ந்து எழுப்புகிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அமைதியும் வளர்ச்சியும் தேவை. 370-வது பிரிவை காஷ்மீரில் இருந்து நீக்கியது பிரதமர் நரேந்திர மோடி செய்த மிகப் பெரிய தவறு.

இது வரலாற்று தவறு காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச அளவுக்கு கொண்டு சென்றுள்ளோம். காஷ்மீர் பிரச்சினை குறித்து, முஸ்லிம் நாடுகளுடன் பேச உள்ளேன். பாலகோட் போன்ற தாக்குதல்களை இந்தியா இனியும் செய்ய முடியாது.

பாகிஸ்தானை ராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்த இந்தியா முயன்றபோதும், பாகிஸ்தானை கருப்புப்பட்டியலில் வைக்க நிதி நடவடிக்கை பணிக்குழுவை வற்புறுத்தியும் அது, தோல்வியடைந்தது.

பாஜக அரசின் நோக்கங்களை விரைவில் எனது அரசு உணர்ந்து கொண்டது. எனவேதான், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பின்பற்றும் இந்தியாவிலுள்ள தற்போதைய அரசுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என்று நாங்கள் முடிவு செய்தோம்.

காந்தியின் கொலைக்குப் பின்னணியில் இருந்தது இந்த ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம்தான். இந்தியாவில் தற்போது நடைபெறும் கும்பல் கொலை சம்பவங்கள் இப்போது முஸ்லிம்களும் பிற சிறுபான்மையினரும் இந்தியாவில் இரண்டாம் தர குடிமக்களாக வாழ காரணமும் அந்த சித்தாந்தம்தான். இந்தியாவில் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகிறார்கள்.

காஷ்மீர் மக்களுக்கு உதவ என்ன வேண்டுமானாலும் செய்வோம். இந்திய அரசின் பிடிவாதம் போரை நோக்கி இட்டுச் செல்ல கூடும்.

இரு நாடுகளிலும் அணு ஆயுதங்கள் உள்ளன. போர் சூழ்நிலை ஏற்பட்டால் உலகம் முழுவதுமே அதனால் பாதிக்கப்படும். எனவே சூப்பர் பவர் நாடுகளுக்கு காஷ்மீர் விவகாரத்தில் முக்கிய பங்கு உள்ளதை அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும் என்று கூறி முடித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers