ஜப்பான் கடல் பகுதியில் திடீரென ஏவுகணைகளால் தாக்கிய வட கொரியா: உயர் எச்சரிக்கையில் அண்டை நாடுகள்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஜப்பான் கடல் பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்ததாக ஜப்பான் கூறியுள்ளது.

சனிக்கிழமையன்று வட கொரியாவிலிருந்து ஜப்பான் கடல் பகுதியல் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டதை கண்டுபிடித்ததாகக் ஜப்பானின் கடலோர காவல்படை கூறியுள்ளது.

மேலும், அக்கடல் பகுதியில் ஏவுகணைகளின் பாகங்கள் இருக்கும் என்பதால் கப்பல்கள் அவ்வழியாக பயணிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

வட கொரியாவின் sondok-ல் உள்ள ராணுவ விமான தளத்திலிருந்து ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக தென் கொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனை குறித்து தென் கொரிய ஜனாதிபதி அலுவலகம் தேசிய பாதுகாப்பு ஆணையம் கூட்டத்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் சமீபத்திய வாரங்களில் பல ஏவுகணைகளை கடல் பகுதியில் சோதனை செய்து வருகிறார்.

பசிபிக்கை கடந்து அமெரிக்க நிலப்பரப்பைத் தாக்கும் திறன் கொண்ட ஒரு ஏவுகணையை தாங்கிச் செல்லும் சிறிய போர்க்கப்பலைக் கட்டும் முயற்சியல் கிம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் வட கொரியா- தென் கொரியா எல்லை என மூன்று முறை கிம்-டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எனினும், இதுவரை எந்த சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers