வெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி... சொன்ன ஆச்சரிய காரணம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சவுதியில் பெண் ஒருவர், கணவர் என்னை அதிகமாக நேசிக்கிறார், அவரிடம் எனக்கு விவகாரத்து வேண்டும் என்று கோரியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இப்படி ஒரு புகாரை கொடுத்துள்ளார். அந்த புகாரில், எனது கணவர் ஒருபோதும் என்னை தவறாக நினைக்க வில்லை, என்னை நிராகரிக்கவில்லை.

அவரின் தீவிர அன்பு மற்றும் பாசத்தால் நான் என்ன செய்வதென்றே தெரியவில்லை. வீட்டை சுத்தம் செய்யும் போது கூட அவர் எனக்கு உதவினார் எனக்கு விவகாரத்து வேணும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, கணவர், எனது மனைவிக்கு சரியானவராகவும், கனிவான கணவராகவும் இருக்க விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் விவாகரத்துக்கு செல்ல வேண்டாம், அதற்கு பதிலாக அதை திரும்பப் பெறுமாறு தனது மனைவிக்கு அறிவுறுத்துமாறு அவர் நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து வழக்க விசாரித்த நீதிமன்றம் இந்த விவகாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இருவரையும் சமரசம் செய்ய அவகாசம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்