பொதுவெளியில் பெற்ற மகளின் கண் முன்னே கொடூரமாக கொல்லப்பட்ட தாயார்: சிதறி ஓடிய பொதுமக்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

துருக்கியில் பெற்ற மகளின் கண் முன்னே தாயார் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட காணொளி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியில் உள்ள உணவகம் ஒன்றில் தமது 10 வயது மகளுடன் 38 வயதான Emine Bulut என்பவர் உணவருந்தியபடி விடுமுறையை செலவிட்டு வந்துள்ளார்.

பரபரப்பான அந்த உணவகத்தில் திடீரென்று புகுந்த Emine Bulut-ன் முன்னாள் கணவர், கத்தியால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நாலா பக்கமும் சிதறியுள்ளனர். இதனிடையே தமது முன்னாள் கணவரின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, அந்த பெண்மணி, தாம் சாக விரும்பவில்லை எனக் கூறி கதறியுள்ளார்.

மட்டுமின்றி, அவரது 10 வயது மகளும், தாயாரிடம் சாகாதிர்கள் அம்மா என வாய்விட்டு கதறியுள்ளார்.

இந்த நிலையில் கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்ட Emine Bulut சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இந்த காணொளியானது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,

துருக்கி நாட்டு இளைஞர்கள் தங்கள் எதிர்ப்பை கடுமையாக தெரிவித்துள்ளனர். இதுபோன்ற விவகாரம் தொடர்பில் தற்போதுள்ள சட்டங்களை மேலும் கடினமாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்