இந்தோனேசியாவில் 7 டொலர் கட்டணத்தில் பெண் பிறப்புறுப்பு சிதைவு தொடர்பில் வெளியான சமூக வலைத்தள விளம்பரம் ஒன்று அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் Jeneponto மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் இஸ்லாமிய அமைப்பு ஒன்று குறித்த விளம்பரத்தை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
கடவுளின் பெயரால் குறித்த விளம்பரத்தை காண நேரிடும் பொதுமக்கள் உடனடியாக அவர்களது பெண் பிள்ளைகளை பிறப்புறுப்பு சிதைவுக்கு உட்படுத்த வேண்டும் என அதில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விளம்பரம் வெளியாகி ஒரு மாதத்திற்குள் சுமார் 100 பெண்கள் தங்களின் ஒரு வயது முதல் 14 வயது வரையான பிள்ளைகள் தொடர்பில் பதிவு செய்துள்ளனர்.
சுமார் 7 டொலர் கட்டணத்திற்கு இந்த கொடூரம் நடந்தேறுவதை அனுமதிக்க முடியாது என பலர் கொந்தளித்துள்ளனர்.
இது சித்திரவதை என இன்னொருவர் பதிவு செய்துள்ளார். இந்தோனேசியாவின் கிராமப்புற பகுதிகளில் தற்போதும் தாய்மார்கள் தங்கள் பெண் பிள்ளைகளை பரவலாக பிறப்புறுப்பு சிதைவுக்கு உட்படுத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய முறைப்படி மத்தியக்கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் சில நாடுகளிலும் இந்த வழக்கம் நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.