பிரியங்கா சோப்ராவை நீக்க கடிதம் எழுதிய பாகிஸ்தான்.. அதிரடியாக நிராகரித்த ஐநா

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நடிகை பிரியங்கா சோப்ராவை நீக்க கோரிய பாகிஸ்தானுக்கு ஐ.நா பதிலடி கொடுத்துள்ளது.

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஐ.நாவின் அமைதிக்கான நல்லெண்ண தூதராக செயல்பட்டு வருகிறார். பாலகோட் பயங்கரவாதிகள் முகாமை தாக்கி அழித்த இந்திய பாதுகாப்பு படையினருக்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா வாழ்த்து தெரிவித்தார். ஆனால், அவருடைய செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அத்துடன் நல்லெண்ண தூதராக இருந்துகொண்டு இவ்வாறு அவர் பதிவிடுவது சரியானது அல்ல என்றும், ஐ.நாவின் நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சனை எழும்போது பிரியங்கா சோப்ரா நடுநிலையாக செயல்படாமல், ஒருதலைபட்சமாக நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.

மேலும், பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷெரீன் மசாரி, நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து பிரியங்காவை நீக்க வேண்டும் என்று ஐ.நாவுக்கு கடிதம் எழுதினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், தற்போது ஐ.நா பொதுச்செயலாளர் அன்டானியோ குட்டர்ஸின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் கூறுகையில்,

‘நல்லெண்ண தூதராக இருப்பவர்கள், அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களின் மீது கருத்து கூற உரிமை இருக்கிறது. அவர்களது சொந்த கருத்துக்களும், செயல்களும் யுனிசெப்-ஐ பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை. யுனிசெப் தொடர்பாக அவர்கள் பேசும்போதோ, கருத்து கூறும்போதோ சார்பில்லாத நிலைப்பாடுகளை கடைப்பிடிப்பார்கள் என்று நம்புகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்