வீடு முழுவதும் இருந்த ஆபாச வீடியோ! பெண்களுக்கு தெரியாமல் செய்த செயல்.. அடுத்தடுத்து வெளியான தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஸ்பெயினில் 53 வயது நபர் ஒருவர் 550-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை இணையத்தில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவை சேர்ந்த அந்த நபர் ஸ்பெயின் தலைநகர் Madridல் வசித்து வந்தார்.

கடந்த ஒரு வருடமாக தனது பைக்குள் செல்போனை மறைத்து வைத்து கொண்டு பொது இடத்தில் இருக்கும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் ஆபாச கோணத்தில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார்.

முக்கியமாக மெட்ரோ ரயில் நிலையம், வணிக வளாகங்கள் போன்ற இடங்களுக்கு வரும் பெண்கள் தான் இவரின் குறியாக இருந்துள்ளது.

இப்படி 550-க்கும் மேற்பட்ட பெண்களை வீடியோ எடுத்துள்ளார்.

இதில் பெரிய அதிர்ச்சி என்னவென்றால், 283 வீடியோக்களை ஆபாச இணையதளத்திலும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்தும் உள்ளனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் இவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இரு தினங்களுக்கு முன்னரும் அவர் மெட்ரோ ரயிலில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அப்போது அவரை பொலிசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.

அவரது வீட்டிற்கு சென்று பொலிசார் சோதனை செய்ததில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள், லேப்டாப், ஹார்ட் டிரைவ்கள் சிக்கின.

இதை தொடர்ந்து அவரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்