மலச்சிக்கலால் தவித்த பெண்... மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் மலச்சிக்கல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தாய்லாந்தின் Nong Khai பகுதியைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் மலச் சிக்கலால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். அதோடு அவர் வயிறு இருக்கமாகவே இருப்பதை உணர்ந்துள்ளார்.

இதனால் அருகில் இருக்கும் Thabo Crown Prince மருத்துவமனைக்கு சென்ற போது, மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர், அப்போது வயிறு மற்றும் பித்தப்பையில் ஏராளமான கற்கள் இருப்பதை கண்டுள்ளனர்.

அதை உறுதி செய்வதற்காக laparoscope மற்றும் சிறிய ரக கமெராவையும் ஒரு டியூப் வழியாக அவரின் வயிற்றின் உள்ளே செலுத்தி பார்த்துள்ளனர்.

அதன் பின் இதற்கான அறுவை சிகிச்சை நடந்த போது, பெண்ணின் வயிறு மற்றும் பித்தப்பையிலிருந்து 1898 கற்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சுமார் 40 நிமிடந்த நடந்த இந்த சிகிச்சைக்கு பின் இப்போது அவர் நலமாக உள்ளார். ஆனால் இவ்வளவு கற்கள் எப்படி வந்தது என்பது குறித்து இன்னும் தெரியவில்லை எனவும், அந்த பெண்ணிடம் கேட்டால் மட்டுமே முழு விபரம் தெரியவரும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இதே போன்று கடந்த 1987-ஆம் ஆண்டு பிரித்தானியாவின் Sussex பகுதியைச் சேர்ந்த 85 வயது பெண்ணின் வயிற்றி 23,530 கற்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்