விடிந்தால் திருமணம்... மகிழ்ச்சியாக வெளியில் சென்ற காதல் ஜோடி சடலமாக மீட்பு!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

திருமணத்திற்கு முந்தைய நாள் சாகசத்தில் ஈடுபட்ட மணமகனும், மணமகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டை சேர்ந்த 21 வயதான விட்டேரியா கோன்வால்வ்ஸ் மற்றும் 34 வயதான மார்லி ரெகோ என்கிற காதல் ஜோடிக்கு புதன்கிழமை திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கு முன்பு கடைசியாக ஒருமுறை வானில் பறக்கும் சாகசத்தில் ஈடுபட ஆசைப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் மத்திய மேற்கு பிரேசிலின் கால்டாஸ் நோவாஸிலிருந்து அந்தரத்தில் பறக்கும் சாகசத்தில் ஈடுபட்டனர்.

புறப்பட்ட சில நிமிடங்களில் இருவரும் வீடியோ எடுத்து தன்னுடைய நண்பர்களின் வாட்ஸ் ஆப் குழுவில் பகிர்ந்துள்ளனர். 42 மைல் (68 கி) தொலைவில் உள்ள பைர்ஸ் டூ ரியோவில் ஒரு பண்ணையில் நண்பர்களுடன் தங்களுடைய கடைசி single தினத்தை கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.

சாகசத்தில் ஈடுபடுவதில் அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் கூட, இந்த ஜோடி ஒருமுறை கூட தங்களுடைய இலக்கை அடைந்தது கிடையாது. அன்றைய தினமும் புறப்பட்ட அரைமணி நேரத்தில் அவர்களுடைய தொடர்பு திடீரென முறிந்துள்ளது.

உடனடியாக அவர்களை தேடும் பணி தீவிரமாக ஆரம்பித்தது. மறுநாள் காலை காட்டுப்பகுதியில் இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இதனால் அவர்களுடைய திருமணத்திற்காக வருகை தந்த உறவினர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பின்னர் வியாழக்கிழமையன்று இருவரின் உடல்களும் ஒரே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்