ஜப்பானில் இந்த வாரத்தில் ஐந்தாவது முறையாக நிலநடுக்கம்!

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

ஜப்பானில் உள்ள டோஹோகு பகுதியில் உள்ள ஆமோரி நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் சுமார் 90 கிலோ மீட்டர் ஆழத்திலும் ரிக்டர் அளவில் 5.4 அலகாக பதிவாகியுள்ளது.

ஜப்பானில் கடந்த மாதத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 55 முறையும், கடந்த வருடத்தில் மட்டும் 742 முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

ஒரு வாரத்தில் மட்டும் 5 முறை சராசரியாக 5.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேலும் நிலநடுக்கம் குறித்த உயிர் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதா? என எந்த தகவலும் வெளியாவில்லை.

சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers