பாலியில் புனித தலம் முன்பு மோசமாக நடந்து கொண்ட ஜோடி: ஆத்திரத்தில் இந்தோனேஷிய மக்கள்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பாலியில் உள்ள புனிதத்தலம் ஒன்றின்முன் ஒரு இளம் ஜோடி மோசமாக நடந்து கொண்ட சம்பவம் இந்தோனேஷிய மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிட்னஸ் மொடல்களான Sabina Dolezalovaவும் அவரது காதலரான Zdenek Sloukaவும் பாலித்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த இடத்தில், Zdenek புனிதத்தலம் ஒன்றின் முன்னிருந்த புனித நீரூற்றிலிருந்து தண்ணீரை எடுத்து தனது காதலியின் பின்பக்கத்தில் தெளிக்க, இருவரும் சிரிக்கும் வீடியோ ஒன்று வெளியானது.

பாலியைச் சேர்ந்த செனேட்டரான Dr. Arya Wedakarna, அந்த மொடல்கள் இருவரும் புனிதத்தன்மையுடைய குரங்குக் கோயிலில் மிக மோசமான ஒரு செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளதோடு, அவர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

வீடியோவை காண

இதற்கிடையில் இந்தோனேஷிய இணையவாசிகள் சிலர் அந்த மொடல்கள் இருவரையும், தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்கும் வரையில், நாட்டை விட்டு வெளியேற விடாமல் தடுக்கும்படி பாலியின் புலம்பெயர்தல் அலுவலகத்தை வற்புறுத்தியிருந்தார்கள்.

இதற்கிடையில் மொடல்கள் இருவரும் வீடியோ ஒன்றில் தங்கள் தவறுக்கு மன்னிப்புக் கேட்டிருந்தார்கள்.

தாங்கள் இருவரும் புனித கோயிலை அவமதித்து விட்டதாகவும், உண்மையில் அது புனித நீர் என்றோ, அங்கு ஒரு புனித கோயில் உள்ளதென்றோ தங்களுக்கு தெரியாதென்றும் கூறி, தங்களை மன்னிக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

பின்னர் பொலிசார் முன் பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய ஜோடி மன்னிக்கப்பட்டுவிட்டதாக, பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers