அதிகளவு இரத்த போக்கு.. அழகான விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்தது என்ன? வெளியான பின்னணி தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் அழகான விமானப்பணிப்பெண் ஒருவர் கொசு கடித்ததன் காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அபிட்சயா ஜெரோண்டி (25) என்ற பெண் லயன் நிறுவனத்தின் விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்தார்.

இந்நிலையில் கொசு கடித்ததன் காரணமாக அபிட்சயாவுக்கு கடந்த வாரம் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அபிட்சயாவின் உடல் நிலை மோசமானது.

அதிக இரத்த போக்கு, உடல் உறுப்பு செயலிப்பு போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அபிட்சயா நேற்று மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அபிட்சயாவின் உறவினர் சுரின் கூறுகையில், அபிட்சாயாவின் மரணத்துக்கு பின்னர் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க வீட்டு ஜன்னல்களை மூடியே வைத்துள்ளோம். தற்போது மழை காலம் என்பதால் கொசுக்கள் அதிகளவு இந்த பகுதியில் உள்ளது.

கொசுக்களை ஒழிக்க மருந்துகள் தெளிக்கப்படும் என அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொசுக்கள் இவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை, அவை மிகவும் ஆபத்தானைவை தற்போது உணர்ந்துவிட்டோம்.

இதை முதலிலேயே உணர்ந்து செயல்பட்டிருந்தால் அபிட்சயா எங்களுடன் உயிரோடு இருந்திருப்பார் என சோகத்துடன் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்