போராடிய பெண்ணிடம் பொலிசார்கள் செய்த செயல்: கசிந்த வீடியோவால் கொந்தளிப்பில் மக்கள்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் போராடத்தில் ஈடுபட்ட பெண்ணை பொலிசார், வயிற்றில் பலமாக தாக்கி தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மாஸ்கோவின் நகர நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை எதிர்த்தும், நாட்டில் சுதந்திரமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மக்கள் மிகப்பெரிய போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை பொலிசார் மோசமாக தாக்கி கைது செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. குறித்த வீடியோவில், மாஸ்கோவில் நடந்த போராட்டத்தில் முகமூடி அணிந்த நான்கு பொலிசார் பெண் ஒருவரை தரதரவென இழுத்துச் செல்கின்றனர், அப்போது, பொலிசாரில் ஒருவர், எக்காரணமும் இன்றி அப்பெண்ணை வயிற்றில் பலமாக தாக்குகிறார். பின்னர், அப்பெண்ணை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றுகின்றனர்.

பின்னர், இளைஞர் ஒருவரின் கையை முறுக்கி தரதரவென இழுத்துச்செல்கின்றனர், பாதிக்கப்பட்ட இளைஞர் ஊனமுற்றவர் என கூறப்படுகிறது. குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் பரவிய வீடியோ குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது, மேலும், குற்றவாளிகள் தகுந்த தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று உறுதியளித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்