கொலம்பியாவில் பாரம்பரிய விழா ஒன்றின்போது ஹெலிகொப்டரிலிருந்து தங்கள் நாட்டுக் கொடியை பிடித்தவாறு தொங்கிக் கொண்டிருந்த இரண்டு விமானப்படை வீரர்கள், அந்த கம்பி திடீரென அறுந்ததால் தரையில் சென்று பயங்கரமாக மோதினர்.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், ஹெலிகொப்டரிலிருந்து தொங்கும் கம்பி ஒன்றில் கொலம்பிய கொடி ஒன்று இணைக்கப்பட்டிருக்க, அதன் மேல் முனையில் ஒருவரும், கீழ் முனையில் ஒருவருமாக இரண்டு ராணுவ வீரர்கள் தொங்கி சாகசம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கம்பி திடீரென அறுகிறது. தலைகுப்புற தரையில் வந்து மோதி விழுந்த அந்த இரண்டு வீரர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
சாகச நிகழ்ச்சியின்போது உயிரிழந்த இருவரும் Jesus Mosquera மற்றும் Sebastian Gamboa Ricaurte என்று கொலம்பிய விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த அசம்பாவிதத்தையடுத்து, விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் Guillermo Botero தெரிவித்துள்ளார்.