வயிற்றுவலிக்காக மருத்துவமனை சென்ற நபர்... 20 வருடங்களுக்குன் பின் தெரிந்த அதிர்ச்சி உண்மை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் தற்கொலைக்கு முயன்ற குற்றவாளி ஒருவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு பற்தூரிகை முழுங்கிய நிலையில், தற்போது அவரின் வயிற்றிலிருந்து பற்தூரிகையை மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கியுள்ளனர்.

சீனாவின் Shenzhen பகுதியைச் சேர்ந்தவர் Li. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். என்ன குற்றத்திற்காக அடைக்கப்பட்டிருந்தார் என்ற தகவல் வெளியாகவில்லை.

அப்போது அவர் சிறையில் தற்கொலை செய்து கொள்வதற்காக பற்தூரிகையை முழுங்கியுள்ளார். ஆனால் அவருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற போது, மருத்துவர்கள் CT -Scan எடுக்கும் படி கூறியுள்ளனர்.

அதன் பின் Scan ரிப்போர்ட்டை பார்த்து வயிற்றின் உள்ளே ஏதோ ஒன்று இருப்பதைக் கண்டுள்ளனர். அதன் பின் அதற்கான சிகிச்சை மேற்கொண்ட போது, உள்ளே பற்தூரிகை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து அது வெற்றிகரமாக நீக்கப்பட்டது. இது எப்படி வந்தது என்ற போது, நான் தற்கொலைக்கு முயன்றேன், அப்போது நானே பற்தூரிகையை விழுங்கினேன் என்று கூறியுள்ளார்.

இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இன்னும் சாதரணமாக விட்டிருந்தால், அது அவரது கல்லீரலை அடைந்து, ஆபத்தான தொற்றுநோய்க்கு வழிவகுத்திருக்க வாய்ப்பிருந்திருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக, அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்