உலக பொருளாதாரத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 25 குடும்பங்கள்: அவர்களின் சொத்துமதிப்பு தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உலகின் மொத்த பொருளாதாரத்தையும் 25 மிகப்பெரும் கோடீஸ்வர குடும்பங்கள் கட்டுப்படுத்துவதாகவும், இவர்களின் சொத்துமதிப்பானது ஒவ்வொரு நிமிடத்திற்கும் அதிகரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகின் பல நாடுகளில் செயல்பட்டுவரும் வால்மார்ட் குழுமத்தின் உரிமையாளர்களான வால்டன் குடும்பமானது ஒவ்வொரு மணி நேரமும் 4 மில்லியன் டொலர்கள் வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் வால்மார்ட் கடைகளில் கணக்கராக பணியாற்றும் ஒருவர் மணிக்கு 11 டொலர்களையே சம்பாதிக்கிறார்.

பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஜூன் மாதம் 191 பில்லியன் டொலர்களுடன் முதலிடத்தில் இருந்த இந்த குடும்பத்தின் தற்போதைய சொத்துமதிப்பு 230 பில்லியன் என கூறப்படுகிறது.

உலகின் 25 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்துமதிப்பு 1.4 ட்ரில்லியன் டொலர் என கூறப்படும் நிலையில், இது கடந்த ஆண்டை விடவும் 250 பில்லியன் டொலர்கள் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மிகப்பெரும் செல்வந்தர்களின் சொத்துமதிப்பும் அசுர வேகத்தில் வளர்ச்சியை எட்டுவதாக தெரியவந்துள்ளது.

ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள உலக செல்வந்தர்கள் குடும்பங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மார்ஸ் குடும்பமானது 127 பில்லியன் டொலர்கள் சொத்துமதிப்பை கொண்டுள்ளது.

இது கடந்த ஆண்டை விடவும் 37 பில்லியன் டொலர்கள் அதிகம் என கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் முதன் முறையாக இந்த ஆண்டு சவுதி அரச குடும்பமும் இணைந்துள்ளது. அவர்களின் சொத்து மதிப்பானது 100 பில்லியன் டொலர்கள் என தெரியவந்துள்ளது.

ப்ளூம்பெர்க் பெரும் பணக்காரர்கள் பட்டியல்

  1. Walton - Walmart - $190.5bn
  2. Mars - Mars (candy) - $126.5bn
  3. Koch - Koch Industries - $124.5bn
  4. Al Saud - Saudi Royal - $100bn
  5. Wertheimer - Chanel - $57.6bn
  6. Hermes - Hermes - $53.1bn
  7. Van Damme, De Spoelberch, De Mevius - Anheuser-Busch InBev - $52.9bn
  8. Boehringer, Von Baumbach - Boehringer Ingelheim- $51.9bn
  9. Ambani - Reliance Industries - $50.4bn
  10. Cargill, MacMillan - Cargill - $42.9bn

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்