பறக்கும் விமானத்தில் பயணி செய்த முகம் சுழிக்கும் செயல்... என்ன செய்தார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வெளிநாட்டில் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் செய்த செயலின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகில் ஒவ்வொரு பகுதியிலிருந்து, இன்னொரு நாட்டிற்கு செல்வதற்கு பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது என்றால் அது விமானம் தான், அப்படி விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் ஒரு சில சமயங்களில் எல்லை மீறி நடந்து கொள்வர்/

உதாரணமாக, விமானத்திலே உறவு வைத்து கொள்வது, சிறுநீர் கழிப்பது, சாப்பிட்ட உணவுகளை அப்படியே வைத்து செல்வது என்ற நிறைய இருக்கின்றன. இது குறித்து விமான நிறுவனம் என்ன கூறினாலும் அதை சிலர் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை.

அதை தற்போது நிரூபிக்கும் வகையில், வெளிநாட்டு விமானம் ஒன்றில் பயணம் செய்த பயணி, ஒருவர் தன்னுடைய காலை எடுத்து, சீட்டில் மேல் வைத்துள்ளார். அந்த சீட்டில் சிறிதாக டிவி ஒன்று உள்ளது.

இதைப் பற்றி நினைக்காமல் அவர் சாதரணமாக அப்படியே இருந்துள்ளார். இதை அந்த விமானத்தில் பயணம் செய்த சக பயணி படம் பிடிக்கவே, அது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தைக் கண்ட இணையவாசிகள் பலரும், இது போன்ற முகம் சுழிக்கும் செயலால் தான் சிலர் விமானத்தில் செல்ல விரும்புவதில்லை என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்