வெறும் கையோடு சென்றவர் ஒரே நாளில் கோடீஸ்வரர்! கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

கேரளாவைச் சேர்ந்த நபருக்கு வெளிநாட்டில் மாலில் நடந்த குலுக்கலில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்துள்ளதால், அவர் எல்லையற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்.

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் Abdul Salam Shanavas. இவர் கடந்த 1997-ஆம் ஆண்டு வெறும் கையோடு அபுதாபிக்கு டிரைவர் வேலைக்காக வந்துள்ளார்.

தற்போது அபுதாபியில் இவர் ஒரு குடும்பத்திற்கு டிரைவராக இருக்கும் இவர், 2,500 திர்ஹம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் அங்கிருக்கும் மாலில் Mall Millionaire என்ற குலுக்கல் போட்டி 47 நாட்களாக நடத்தப்பட்டது.

இதில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் 200 திர்ஹம் கொடுத்து அந்த குலுக்கல் சீட்டில் பெயர் மற்றும் முகவரி எழுதி போட வேண்டும். 47 நாட்களுக்கு பின்னர் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 5-ஆம் திகதி இந்த குலுக்கலில் வெற்றி பெற்றிருப்பது Abdul Salam Shanavas என்பது தெரியவந்துள்ளது.

இதற்காக அவருக்கு 1 மில்லியன் திர்ஹம்(இலங்கை மதிப்பில் 4,81,60,071 கோடி ரூபாய்) விழுந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், நான் கடந்த 50 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறேன், ஆனால் என்னிடம் அந்தளவிற்கு பணம் இல்லை. என்னிடம் இதை 5-ஆம் திகதியே சொல்லிவிட்டனர்.

ஆனால் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக காத்திருந்தேன், அதுமட்டுமின்றி நான் பரிசு வென்றதற்கான குறுந்தகவலும் என்னுடைய போனுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதை நான் நீக்கிவிட்டதால், பரிசு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்தது.

பரிசு கொடுக்கும் குழுவினர் என்னுடைய போன் நம்பரை வைத்து உறுதி செய்துவிட்டனர். இதனால் எனக்கு அந்த பயம் போய்விட்டது.

எனக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் ஒருத்திக்கு 7 வயது, ஒருத்திக்கு 14 வயது, என் மனைவியிடம் இதைப் பற்றி கூறும் போது இன்ப அதிர்ச்சியடைந்தாள்.

கிடைத்திருக்கும் பணத்தை வைத்து, ஒரு சிறிய இடம் ஒன்றை வாங்கி வீடு கட்ட வேண்டும் ,அதன் பின் கொஞ்ச பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்