பாலத்தின் விளிம்பில் முத்தமிட்டுக்கொண்ட ஜோடி: அடுத்து நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பாலம் ஒன்றின் விளிம்பில் முத்தமிட்டுக்கொண்ட ஒரு இளம்ஜோடி, 50 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து பலியான காட்சி அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகி நெஞ்சை பதைபதைக்கச் செய்துள்ளது.

பெரு நாட்டில், இரவு விடுதி ஒன்றிற்கு சென்று திரும்பிய Maybeth Espinoz மற்றும் Hector Vidal என்னும் ஜோடி Bethlehem Bridge என்னும் பாலத்தின் மீது நடந்து சென்று கொண்டிருந்திருக்கின்றனர்.

அப்போது அந்த பாலத்தின் விளிம்பில் உள்ள கைப்பிடியில் சாய்ந்து, இருவரும் முத்தமிட்டுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

அந்த கைப்பிடியில் உட்கார்ந்து கொண்ட Maybeth, ஒரு கட்டத்தில் தன்னை மறந்து, தன் கால்களை Hectorஐச் சுற்றி வளைத்துக் கொண்டு முத்தமிடும்போது, திடீரென பின்பக்கமாக சரிந்திருக்கிறார்.

உறுதியாக நிற்காத Hectorம் சரிய, இருவருமாக 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்திருக்கிறார்கள்.

இந்த கோர சம்பவத்தில் Maybeth உடனடியாக உயிரிழக்க, மண்டை உடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Hector, பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார்.

உயிரிழந்த இருவரும் மலையேற்றம் செய்வதில் வல்லவர்கள் என்றும், சுற்றுலா வழிகாட்டிகளாக பணிபுரிவதற்காக அப்பகுதிக்கு சமீபத்தில்தான் குடிபெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்