அடையாளம் தெரியாத அளவு கோரமாக கொல்லப்பட்டுக் கிடந்த அழகிய இளம்பெண்: தெரியவந்த அதிரவைக்கும் தகவல்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ரஷ்ய கிராமம் ஒன்றில், ஒரு அழகிய இளம்பெண்ணின் உடல் அடையாளம் தெரியாத அளவு கோரமாக சிதைக்கப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவள் கரடியால் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

முகம் சிதைந்து, தலை கிட்டத்தட்ட கழுத்திலிருந்து தனியாக வந்து, தலைமுடி மண்டையிலிருந்து தனியே பிய்ந்து வந்த நிலையில் கிடந்த ஒரு உடலைக் கண்ட சில இளைஞர்கள், ஊருக்குள் வந்து தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

இதற்கிடையில் கடைக்குச் சென்ற தனது மகள் Sonya Chernigova (14) வீடு திரும்பாததால் கவலையடைந்த அவளது தந்தை Sergey Chernigov, கோரமாக இறந்து கிடந்த அந்த பெண்ணின் சட்டை தனது மகளுடைய சட்டை என்பதை அறிந்து, அவளது மொபைலுக்கு அழைக்க, இறந்து கிடந்த அந்த பெண்ணின் பாக்கெட்டில் இருந்து மொபைல் ஒலித்திருக்கிறது.

அதற்குப் பின்தான், அது தனது மகள் என்பதே Chernigovக்கு தெரியவந்திருகிறது. அந்த அளவுக்கு அவளது முகம் சிதைந்திருந்தது.

அவர்கள் வசித்து வந்த Yodva கிராமப் பகுதியில் ஓநாய்கள் உண்டு என்பதால், Sonyaவை ஓநாய்தான் கொன்றிருக்க வேண்டும் என அவளது தந்தை எண்ணிக்கொண்டார்.

ஆனால் பின்னர் அப்பகுதியை ஆராய்ந்த நிபுணர்கள், அங்கு கரடியின் கால்தடம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன் கரடிதான், தான் பிடித்த மனிதனின் தலைமுடியை பிய்த்தெடுக்கும் என்பதால் Sonyaவைக் கொன்றது கரடிதான் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் அனைவரும்.

அப்பகுதி மக்களால், நல்ல மாணவி என அழைக்கப்படும் Sonyaவின் கோர மரணம், அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்