கருக்கலைப்பு மிகப்பெரிய குற்றமாக கருதப்படும் நிலையில் வந்த புதிய அதிரடி சட்டம்... எந்த நாட்டில் தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தில் பெண்கள் கர்ப்பமான 20 வாரங்களுக்குள் மருத்துவரின் உதவியோடு கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்ற சட்டம் அமலுக்கு வரவுள்ள நிலையில் அது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும் கர்ப்பம் தரித்ததால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உடல் ரீதியிலோ அல்லது மன ரீதியிலோ ஆபத்து இருக்கும் பட்சத்தில் அவர் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம்.

அதுவும் அந்த பெண்ணை 2 மருத்துவர்கள் பரிசோதித்து அவர்கள் அனுமதி வழங்கினால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் இந்த கடுமையான சட்டத்தை நீக்க வேண்டும் எனவும், கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றமாகாது என்பதை அறிவிக்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சட்டம் நிறைவேறும் பட்சத்தில் பெண்கள் கர்ப்பம் தரித்த 20 வாரங்களுக்குள் மருத்துவரின் உதவியோடு கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்.

இதற்காக அவர்கள் எந்த சட்ட வழிமுறைகளையும் பின்பற்ற தேவையில்லை.

இதுகுறித்து அந்நாட்டின் சட்டத்துறை அமைச்சர் ஆன்ட்ரூ லிட்டில் கூறுகையில், உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளை கருத்தில் கொண்டு பாதுகாப்பான கருக்கலைப்பு அவசியமாகிறது.

நியூசிலாந்தில் தற்போது குற்றமாக கருதப்படும் ஒரே மருத்துவ நடைமுறையாக கருக்கலைப்பு மட்டுமே உள்ளது. அதை மாற்றுவதற்கான நேரம் இது. குற்றச் சட்டத்தில் இருந்து கருக்கலைப்பு நடைமுறையை நீக்க புதிய மசோதா வகைசெய்கிறது.

இதனிடையில் மத ரீதியாக கருக்கலைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...