மின் தூக்கியில் சிக்கிய சகோதரன்.. நொடிப்பொழுதில் காப்பாற்றிய சிறுமி! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

துருக்கி நாட்டில் மின் தூக்கி ஒன்றில் கயிறு மூலம் சிக்கிய தனது சகோதரனை, புத்திசாலித்தனமாக செயல்பட்டு சிறுமி காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரண்டு சிறுமிகளும், ஒரு சிறுவனும் மின் தூக்கி ஒன்றில் ஏறினர். குறித்த சிறுவன் கயிறு கட்டியபடி ஏறியிருந்தார். மின் தூக்கி செயல்பட்டபோது, சிறுவனுடைய கயிற்றின் ஒரு நுனி கதவுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டது.

மறு நுனி சிறுவனின் தலையில் கட்டப்பட்டு மேலே தூக்கியது. இதனால் அச்சிறுவன் மூச்சு திணறவே, அருகில் இருந்த அவனது சகோதரி கால்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டாள். பின்னர் உடனே அவசர அழைப்பு பொத்தானை அழுத்துகிறாள்.

அதன் பின் மெதுவாக அவனை கீழே இறக்குகிறாள். இச்சம்பவம் அங்கிருந்த கமெராவில் பதிவானது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும், சகோதரனை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அத்துடன் குறித்த சிறுவன் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்