ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்து சிதறிய கார்: 19 பேர் பலி... 30 பேர் காயம்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

எகிப்திய தலைநகர் கெய்ரோவில் பல கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட வெடிவிபத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர்.

கெய்ரோவில் உள்ள தேசிய புற்றுநோய் மருத்துவமனைக்கு வெளியே போக்குவரத்து விதிகளை மீறிய கார் ஒன்று வேகமாக மற்ற கார்களின் மீது மோதி வெடித்து சிதறியுள்ளது.

இந்த சம்பவத்தில் 19 பேர் பலியாகியுள்ளதாகவும், 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மூன்று முதல் நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கலீத் மெகாஹெட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்த மக்களில் பலரும் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சிதறி கிடந்த உடல்பாகங்களை மீட்டிருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் நிகழ்ந்த உடனே புற்றுநோய் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்