பிறந்ததும் குழந்தைக்கு விஷம் கொடுத்து 3வது மாடியிலிருந்து தூக்கி வீசிய தாய்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் பிஞ்சுக்குழந்தைக்கு விஷம் கொடுத்து, 3 வது மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 23ம் திகதியன்று தாய்லாந்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பிளாஸ்டில் பையில் அடைக்கப்பட்ட பிஞ்சுக்குழந்தை ஒன்று, உயிருக்கு போராடுவதை பார்த்து பெண் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் விரைந்து வந்த பொலிஸார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சில நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது Aom என்கிற 18 வயது பெண் ஒருவர் கருப்பு நிறத்திலான பிளாஸ்டிக் பையினை மூன்றாது தளத்திலிருந்து வீசுவது எதிரில் இருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து Aom மற்றும் அவருடைய காதலன் ஜே (23) ஆகியோரை கைது செய்து பொலிஸார் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் குற்றத்தை மறுத்த Aom, டி.என்.ஏ சோதனையில் உறுதியான பின்னர் தவறை ஒப்புக்கொண்டார். நான் கர்ப்பிணியாக இருக்கிறேன் என்பது எனக்கு தெரியாது.

திடீரென பிரசவ வலி ஏற்பட்டதும், வேகமாக பாத்ரூம் சென்று குழந்தை பெற்றுக்கொண்டேன். அந்த குழந்தைக்கு என்னுடைய காதலன் தந்தை இல்லை என்கிற காரணத்தால் எனக்கு பயம் அதிகரித்தது.

உடனே அதனை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக இரசாயனத்தை குழந்தையின் வாயில் ஊற்றி, ஒரு பையில் அடைத்து மாடியில் இருந்து தூக்கி எறிந்தேன். பின்னர் பாத்ரூம் முழுவதையும் சுத்தம் செய்துவிட்டு வழக்கம் போல சாதாரணமாக வீட்டில் இருந்தேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவருடைய காதலனிடம் விசாரிக்கையில், சம்பவம் நடைபெற்ற அன்று நாப்கின் வாங்கி வருமாறு Aom கூறினார். அதனால் நானும் கடைக்கு சென்று வாங்கிவந்து கொடுத்தேன். திரும்பி வந்த பொழுது வீடு சாதாரணமாக தான் இருந்தது.

ஆனால் Aom மட்டும் களைப்புடன் இருந்தார். அதனால் வீட்டில் நடந்தவை பற்றி என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை எனக்கூறியுள்ளார்.

இந்த நிலையில் கொலை சம்பவத்தில் ஜே-க்கு தொடர்பு இல்லை என்றாலும் கூட, சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்