ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து! பாகிஸ்தான் கடும் கண்டனம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு பாகிஸ்தான் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் அறிவித்தார்.

இதோடு ஜம்மு காஷ்மீர் இரண்டாவதாக பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லாடாக் பகுதி பிரிக்கப்பட்டு சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது ஜம்மு காஷ்மீர் பகுதி சட்டபேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது

இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய பாகிஸ்தான் ஜனாதிபதி அரீப் அலி, சிறப்பு அந்தஸ்தை நீக்கியது அந்த மாநில மக்களின் விருப்பத்துக்கு மாறானது என கூறியுள்ளார்.

மேலும் காஷ்மீர் நிலைமை குறித்து விவாதிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றம் அவசரமாக கூடுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்