தன்னை விட 17 வயது குறைவான நபரை திருமணம் செய்த அழகான கோடீஸ்வர பெண்.. வெளியான புகைப்படங்கள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஜேர்மனியை சேர்ந்த மொடலும், கோடீஸ்வர பெண்ணுமான ஹீடி குளும் தன்னை விட 17 வயது குறைவான இளைஞரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மொடல், தொழிலதிபர், நடிகை என பன்முகத்தன்மை கொண்டவர் ஹீடி குளும் (46) கோடீஸ்வரியான இவரின் நிகர சொத்து மதிப்பு $90 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

இவருக்கு கடந்த 1997ஆம் ஆண்டு ரிக் பிபினோ என்ற நபருடன் திருமணம் நடந்த நிலையில் 2002ல் விவாகரத்து ஆனது.

பின்னர் சீல் என்பவரை 2005ஆம் ஆண்டு மணந்த ஹீடி 2014ல் அவரை பிரிந்தார்.

இதையடுத்து கடந்தாண்டு ஹீடி தன்னை விட 17 வயது குறைவான டாம் கவுலிட்ஸ் (29) என்பவருடன் காதல் வயப்பட்டார்.

இதன்பின்னர் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஹீடியும், டாமும் இரண்டாவது முறையாக இத்தாலியில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்தில் ஹீடியின் நான்கு பிள்ளைகளும் கலந்து கொண்டனர்.

இது குறித்து டாம் கூறுகையில், என் மனைவியின் அழகில் நான் மயங்கிவிட்டேன், அவர் என் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஹீடின் கூறுகையில், எங்கள் வயது வித்தியாசத்தை பற்றி பலர் கேட்கிறார்கள், நான் என் வயது குறித்து நினைப்பதேயில்லை.

யாராவது அது குறித்து பேசினால் தான் எனக்கு நினைவே வரும்.

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என நாம் கவலைப்பட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இருக்காது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்