ஜப்பானில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

2011ம் ஆண்டு பூகம்பம் மற்றும் சுனாமியில் பேரழிவிற்குள்ளான அணு மின் நிலையத்தின் தாயகமான ஜப்பானின் புகுஷிமா மாகாணத்தில், இன்று 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது .

ஜப்பான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹோன்ஷு தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

உள்ளுர் நேரப்படி இரவு 7.23 மணியளவில் புகுஷிமா மாகாணத்தின் கரையிலிருந்து 50 கிமீ (30 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

சேதம் குறித்த உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை. இந்த நிலநடுக்கம் கடலோரத்தை மையமாகக் கொண்டிருந்தாலும் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் புகுஷிமா மற்றும் மியாகி மாகாணங்களில் உணரப்பட்டுள்ளது. டோக்கியோவில் சுமார் 45 வினாடிகள் கட்டிடங்கள் குலுங்கியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்