மோசமான வானிலை... கடலில் மூழ்கிய 3 கப்பல்கள்: 19 பேர் பலி..12 பேர் மாயம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் மோசமான வானிலை காரணமாக 3 கப்பல்கள் கடலில் மூழ்கியதில் 19 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பலத்த மழையின் மத்தியில் இலாயோ நகரம் மற்றும் குய்மாரஸ் மாகாணம் இடையே நிலவும் மோசமான கடலில் சனிக்கிழமை இந்த விபத்துக்கள் ஏற்பட்டதாக தேசிய பேரிடர் ஆணையம் மற்றும் மேலாண்மை கவுன்சில் தெரிவித்துள்ளது.

சி-சி என்கிற கப்பலில் நான்கு பணியாளர்கள் மற்றும் 43 பயணிகள் புறப்பட்டுள்ளனர். கெஸ்ஸியா என்கிற கப்பலில் நான்கு பணியாளர்களும், ஜென்னி வின்ஸ் என்கிற கப்பலில் 34 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் பயணித்ததாக EFE செய்தித்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் குறைந்தபட்சம் 59 பேர் மீட்டப்பட்டுள்ளதாக அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்