இந்தோனேசியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: நிலைகுலைய வைக்கும் புகைப்படங்கள் வெளியானது

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை தாக்கிய பயங்கரமான நிலநடுக்கத்தை அடுத்து வெளியான புகைப்படங்கள் பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

ரிக்டர் அளவில் 7 என பதிவான இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் தலைநகர் ஜகார்த்தாவில் ஒரு நிமிட நேரம் கட்டிடங்கள் மொத்தமும் குலுங்கியுள்ளன.

இதனால் பயத்தில் அலறிய பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு வெளியே விரைந்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி சுமார் 19.03 மணியளவில் சுமத்ரா தீவை தாக்கியுள்ளது. இதனையடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு விரைந்துள்ளனர்.

நிலநடுக்கம் தொடர்பில் பேசிய தேசிய பேரிடர் முகமை செய்தித் தொடர்பாளர் அகஸ் விபோவோ, பான்டென் மற்றும் மேற்கு ஜாவா பகுதிகளில் நிலநடுக்கத்தை அடுத்து தற்காலிக தங்குமிடங்களுக்கு விரைந்துள்ள மக்களில் கூட்ட நெரிசலில் சிக்கி நால்வர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நால்வர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். மட்டுமின்றி இதுவரை 223 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான குடியிருப்புகள் பாண்டென் பகுதியிலேயே சேதமடைந்துள்ளது. இந்த பகுதியிலேயே கடந்த டிசம்பர் மாதம் சக்தி வாய்ந்த சுனாமி அலைகள் தாக்கியது நினைவுகூறத்தக்கது.

ராணுவமும் தன்னார்வ தொண்டு அமைப்புகளும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

260 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தோனேசியா நாடானது நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பதால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு நடுவே இங்குள்ள மக்கள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்