விமானத்தில் கடுமையாக தாக்கிக்கொண்ட பயணிகள்: கைது செய்த பொலிஸார்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

துருக்கியிலிருந்து ரஷ்யா நோக்கி புறப்பட்ட விமானத்தில் கடுமையாக தாக்கிக்கொண்டு மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவித்த மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரஷ்யாவிலிருந்து துருக்கி நாட்டிற்கு சுற்றுப்பயணம் வந்த பயணிகள் நேற்று, இஸ்தான்புல்லிலிருந்து யெகாடெரின்பர்க் செல்லும் ஏ 319 ஏர் விமானத்தில் புறப்பட்டனர்.

விமானம் புறப்பட தயாராக இருந்த நேரத்தில், திடீரென பெண் பயணி மீது ஒரு ஆண் பயணி தாக்குதல் நடத்தியதாக சர்ச்சை எழுந்தது.

இதனால் இரண்டு ஆண் பயணிகள் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதனை அங்கிருந்த சக பயணிகள் விலக்கி விடுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டனர். இந்த சத்தம் கேட்டு அங்கிருந்த குழந்தைகளும் அழ ஆரம்பித்துள்ளன.

இதற்கிடையில் விரைந்து வந்த விமான பணியாளர்கள் அவர்களை சமாதானம் செய்து, விமானத்திலிருந்து வெளியேற்றினர். தற்போது வெளியேற்றப்பட்ட ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுளளனர்.

இந்த சம்பவத்தில் பெண் பயணி தான் முதலில் தாக்குதல் நடத்தியதாக நேரில் பார்த்த சக பயணி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்