அமெரிக்கா-ரஷ்யா இருவரில் யார் பலம்? ஆயுத போட்டி வருமா? அணு ஆயுதத் தடை ரத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அமெரிக்காவும், ரஷ்யாவும், பனிப் போர் காலத்தில் நடுத்தர தொலைவு ஏவுகணைகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக செய்யப்பட்டிருந்த ஒப்பந்தத்தை இருநாடுகளுமே ரத்து செய்துள்ளதால், ஆயுத போட்டி வருமா என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடந்த வெள்ளிக் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையிலான அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது.

அமெரிக்கா மேற்கொண்ட முன் முயற்சிகளின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ, ரஷியாவுடனான அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அப்போது அவர், இந்த ஒப்பந்தம் முறிவடைந்ததற்கு முக்கிய காரணமே ரஷ்யா தான் என்று குற்றம்சாட்டினார்.

அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷியாவுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வந்த காலகட்டத்தில், ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட நடுத்தர தொலைவு ஏவுகணைகளை எல்லைப் பகுதியில் சோவியத் ரஷ்யா நிறுத்தியது.

அதனை எதிர்கொள்வதற்காக, நேட்டோ படையும் அமெரிக்காவின் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை ஐரோப்பிய நாடுகளில் நிறுத்தி வைத்தது.

இதனால் இரு தரப்பிலும் அணு ஆயுதப் போர் அபாயம் அதிகரித்ததால், அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷியாவுக்கும் இடையே 1981-ஆம் ஆண்டில் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது.

சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தை ஒரு கட்டத்தில் சுமூகமாக முடிய, நடுத்தர தொலைவு ஏவுகணைகளைக் கைவிட இரு நாடுகளுக்கும் இடையே கடந்த1987-ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், தங்களிடம் ஏற்கெனவே இருந்த நடுத்தர தொலைவு ஏவுகணைகள், அவற்றை ஏவும் சாதனங்கள், எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றை அழிக்கவும் இரண்டு நாடுகள் ஒப்புக் கொண்டது.

இந்த நிலையில், அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ரஷியா மீறி வருவதால் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்