ஒசாமா பின்லேடனின் மகன் எங்கே எப்படி இருக்கிறார்? முக்கிய அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஒசாமா பின்லேடனின் மகன் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அமெரிக்கா அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து அல்கொய்தா மற்றும் ஜிகாதிகளின் தலைவனாக அவரது மகன் ஹம்சா முடிசூடி கொண்டார்.

ஜிகாதின் இளவரசர் என்று அழைக்கப்படும் ஹம்சா பின்லேடன், பயங்கரவாத நபராக மாறிவிடுவார் என்ற அச்சத்தின் மத்தியில், பிப்ரவரி மாதம் அவரின் தலைக்கு ஒரு மில்லியன் டொலர் வெகுமதியை அமெரிக்கா அறிவித்தது.

ஆனால், இப்போது 30 வயதிற்குட்பட்ட ஹம்சா ஏற்கனவே இறந்துவிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள், அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ஹம்சா சிக்கி கொல்லப்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர்.

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா 2017 வான்வழித் தாக்குதலில் இறந்திருக்கலாம், ஆனால் நிதி திரட்டலை அதிகரிப்பதற்காக அல்கொய்தா அதை மூடிமறைத்தது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்

2017 டிசம்பரில் நடந்த வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பிராந்தியத்தில் ஹம்ஸா இறந்துவிட்டதாக பரிந்துரைத்த ஆதாரங்களை நியூயார்க் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது.

2017 தாக்குதலில் ஒசாமா பின்லேடனின் பெயரிடப்பட்ட ஹம்ஸாவின் 13 வயது மகன் ஒசாமா கொல்லப்பட்டதாக அல்கொய்தா அறிவித்த அதே நேரத்தில் தான். ஹம்சாவும் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஊகம் இப்போது அதிகரித்து வருகிறது.

இத்தாக்குதலில் உயிர் பிழைத்த ஹம்ஸாவின் மனைவியும் குழந்தையும் ஈரானுக்கு தப்பி ஓடிய அதே நேரத்தில் ஹம்ஸா இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்