ஆறு மாதமாக பூட்டிக்கிடந்த குடியிருப்பு: திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பூட்டியிருந்த குடியிருப்பில் இருந்து ஈக்கள் தொல்லை அதிகரித்ததால் திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் குடியிருப்பு ஒன்றில் இருந்து துர்வாடை வீசியதுடன் ஈக்களின் தொல்லையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

பல நாள் சகித்து வந்த மக்கள் ஒருகட்டத்தில் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த பொலிசார், பூட்டியிருந்த அந்த குடியிருப்பை வலுக்கட்டாயமாக திறந்துள்ளனர்.

திறந்து பார்த்த அதிகாரிகள் ஒருகணம் மிரண்டுள்ளனர். அந்த குடியிருப்பில் மிகவும் சேதமடைந்த நிலையில் ஒரு ஆணின் சடகம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் அவர் பெயர் அலக்சாண்டர் எனவும், அவர் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக அப்பகுதி மக்கள் அந்த குடியிருப்பில் இருந்து துர்வாடை வீசுவதாக பொலிசாருக்கு பலமுறை தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

அந்த குடியிருப்பில் அவர் மட்டுமே தனியாக குடியிருந்து வந்ததாக கூறப்படுகிறது. சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அவருடன் இருந்த தாயார் மரணமடைந்துள்ளார்.

மட்டுமின்றி, அப்பகுதி மக்களுடன் அவர் அதிகமாக பேசுவதில்லை எனவும், குடியிருப்பில் இருந்து அவர் வெளியே செலவது மிகவும் அரிது எனவும் அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்