கணவன் கண்டுகொள்ளவில்லை... நடுசாலையில் அதிரவைத்த மனைவியின் செயல்: வீடியோ

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கணவரிடம் சண்டையிட்டு கோபம் தலைக்கேறிய மனைவி, நடுசாலையில் காரின் மீது ஏறி நின்ற சம்பவத்தில், கணவருக்கு பொலிசார் அபராதம் விதித்துள்ளனர்.

மத்திய சீனாவில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக வெளியான காணொளி காட்சி ஒன்று தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கணவன் மனைவி இருவரும் சென்றுகொண்டிருந்த காரில் வைத்தே மனைவி கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மட்டுமின்றி தாம் கோபத்தில் இருப்பதை கூட கணவன் கண்டுகொள்ளவில்லை எனவும் கருதிய அந்த மனைவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.

போக்குவரத்து சமிக்கையின்போது நின்றிருந்த காரின் மீது அவர் ஏறி நின்றுள்ளார். பச்சை சமிக்கை தெரிந்தும் கார் நகரவில்லை என்பது மட்டுமல்ல, வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிசார் சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்துள்ளனர். கனவன் மனைவி இருவரையும் விசாரணைகாக அழைத்து சென்றுள்ளனர்.

விசாரணையில் கணவருக்கு வாகன உரிமம் இல்லை என்பது வெளிச்சத்துக்கு வந்தது. தொடர்ந்து அவருக்கு அபராதம் விதித்த பொலிசார், மனைவியை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்