எஜமானரின் குழந்தையை காப்பாற்ற விஷப்பாம்புடன் கடும் போராட்டம்: கண்கலங்க வைக்கும் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் உறங்கிக்கொண்டிருந்த எஜமானரின் குழந்தையை காப்பாற்றுவதற்காக கொடிய விஷப்பாம்புடன் சண்டையிட்ட நாய் கடைசியில் உயிரிழந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெய்ம் செலிம் - பாயி என்கிற தம்பதியினருக்கு ஒரு வயதில் ஸ்கையி என்கிற மகன் இருக்கிறான்.

தம்பதியினர் இருவரும் நேற்று வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் இருந்த பணியாளர் குழந்தையை உறங்கவைத்துவிட்டு வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்துள்ளார்.

அப்போது வாசல் வழியாக நுழைந்த கொடிய விஷம் கொண்ட நாகபாம்பு, குழந்தை உறங்கி கொண்டிருந்த அறைக்குள் செல்ல முயன்றது.

இதனை பார்த்ததும் செலிமின் வளர்ப்பு நாய்கள் மைலி மற்றும் மாக்ஸி அந்த நாகத்துடன் கடுமையாக சண்டையிட்டு கொன்றன.

ஆனால் அடுத்த நொடியிலே மைலி உடலில் விஷம் பாய்ந்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும், அந்த விஷம் மாக்ஸியின் கண்களில் பட்டதால் அது கண்பார்வையை இழந்திருக்கிறது.

இந்த நிலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய செலிம், அங்கு மைலி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பணிப்பெண் கூறியதும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கண்ணீர் வடித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்