விமான நிலையத்தில் திடீரென கேட்ட வெடிச்சத்தம், அலறியடித்து ஓடிய மக்கள்: நடந்தது என்ன?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

துருக்கி விமான நிலையம் ஒன்றில் திடீரென கேட்ட வெடிச்சத்தத்தால், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்களோ என அஞ்சிய மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

துருக்கியின் Dalaman விமான நிலையத்தில் திடீரென ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

சமூக ஊடகம் ஒன்றில் இது குறித்து எழுதிய Jack Strange என்பவர், எல்லோரும் அலறிக்கொண்டே ஓடுவதாகவும், அது தீவிரவாதிகள் தாக்குதல் என நினைத்து விட்டதாகவும், விமான நிலையம் முழுவதுமே குழப்பத்தில் ஆழ்ந்ததாகவும் தெரிவிக்கிறார்.

Danny Walker என்பவர் ட்விட்டரில், கெமராவில் சிக்கிய காட்சிகளைப் பார்க்கும்போது மோசமான சூழல் நிலவியது போலிருந்தாலும், யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கிறார்.

நடந்த களேபரத்தில் என் மனைவியின் பாஸ்போர்ட் தவறி விட்டது, எனது ஷூவையும் தவற விட்டு விட்டேன் என்று கூறியுள்ள Danny, பிரச்சினை ஒன்றுமில்லை, இது வெளியே பெரிய செய்தியாகியிருக்கும் என்றால், நாங்கள் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று எழுதியுள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு ராணுவ வீரர்கள் வர, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், ஒரு செல் போனின் பேட்டரி வெடித்ததாகவும் அதனால்தான் இவ்வளவு குழப்பமும் என விளக்கமளித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்